ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தம் என்ன தெரியுமா? மாற்ற வேண்டும் என 30,000 பேர் மனு

0
310

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் பெண்(woman) என்ற வார்த்தைக்கு தரக் குறைவான அர்த்தம் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனால் அந்த அர்த்தத்தை  மாற்றக் கோரி 30,000 பேர் கையெழுத்திட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை எழுதியவர் மரியா பீட்ரைஸ் ஜியோவானார்டி என்ற பெண் . அதில் பெண்(woman) என்ற வார்த்தையின் அர்த்தத்திற்கு பலவீனமானவள், வேசி என பெண்களை இழிவுபடுத்தும் விதமான வார்த்தைகளை ஆன்லைன் ஆக்ஸ்போர்டு அகராதியில் பயன்படுத்தியுள்ளனர்.

woman என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் “bitch, besom, piece, bit, mare, baggage, wench, petticoat, frail, bird, bint, biddy, filly” என பொருள் தருகிறது. இந்த வார்த்தைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த அர்த்தங்கள் பெண்களை பாலியல் பொருளாக சித்தரிக்க்கிறது. மேலும் அதில் சில வாக்கியங்கள் பெண்களை அடி பணிந்தவர்கள் என்றும் குறிக்கின்றனர் என்று கூறியுள்ளார் மரியா பீட்ரைஸ் ஜியோவானார்டி.

அகராதி பொருளடக்க குழுவின் தலைவர் கேத்ரின் கானர் மார்ட்டின்,
இது சம்மந்தமாக விசாரணை தொடங்கியுள்ளோம், விரைவில் மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Google Search


Google Search

http://scoopwhoop

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here