ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி? சோதனையை முடிக்க ஓர் ஆண்டாவது அவகாசம் தேவை: மருத்துவர்கள் எச்சரிக்கை

0
614

இந்திய நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை அவசர கதியில் மனித பரிசோதனை செய்து பயன்பாட்டில் விடுதல் என்பது ஆபத்தில் முடியும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பேட்டி அளித்த இந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத், பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 12 மருத்துவமனைகளில் எதிர்வரும் 7ம் தேதி முதல் க்ளினிக்கல் டெஸ்ட் எனப்படும் மனித பரிசோதனை தொடங்க உள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் இந்த பரிசோதனையை முடிக்க சில மாதங்கள் பிடிக்கும் என்று கூறியுள்ள ரவீந்திர நாத், ஆகஸ்டுக்குள் இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முயல்வது ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்.

மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யும் phase 1,phase 2 சோதனைகளை செய்யவே சில மாதங்கள் பிடிக்கும் நிலையில்,ஜூலை 7ல் ஆய்வு தொடங்கி ஆகஸ்ட்டில் முடிக்க இயலுமா என்று மருத்துவர் ரவீந்திர நாத் வினவியுள்ளார். கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ஐசிஎம்ஆர் அவசரம் காட்டுதல் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வளவு வேகமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என உலகில் எதுவும் இல்லை என புனேவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவன பேராசிரியர் வினீதா பால் கூறியுள்ளார். அதேபோல, சோதனை முறையிலான பணிகளே நடந்துக்கொண்டிருக்கும் வேளையில், ஜூலை 7ம் தேதி முதல் மருத்துவ சோதனைக்கான ஆட்சேர்ப்பு எப்படி தொடங்கப்பட்டது?

ஒரே மாதத்திற்கும் தடுப்பூசி சோதனை முடிவடைவது என்பது சாத்தியமில்லாதது. மருத்துவ பரிசோதனை வெற்றியை முன்கூட்டியே ஐ.சி.எம்.ஆர் தீர்மானித்துள்ளதா என பயோடெக் நிறுவனத்தில் பணிபுரியும் அனந்த் பன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here