விரைவில் கேஜிஎஃப் சேப்டர் 2 பர்ஸ்ட் லுக்

கன்னட திரையுலகிலிருந்து வந்த கேஜிஎஃப் சேப்டர் 1 இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் மெகா ஹிட்டானது. பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்க, யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. முதலில் வில்லன் அதீராவின் படத்தை வெளியிடுகின்றனர். இந்த வேடத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட்டில் பூசணிக்காய் உடைக்கும் பிகில் டீம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்பட ஏராளமானோர் பிகில் படத்தில் நடித்து வருகின்றனர். ரஹ்மான் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக், பர்ஸ்ட் சிங்கிள் பெரும் வரவேற்பை பெற்றது. தீபாவளி வெளியீடாக வெளிவரும் பிகில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர். இதில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி வருகிறது.

மாதவன் இயக்கும் படத்தில் இடம்பெற்ற காமெடி நடிகர்

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் இயக்கி நடித்து வருகிறார். இதில் அவரது மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் பிரபல காமெடி நடிகர் ஜெகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொதுவாக கே.வி.ஆனந்த் மட்டுமே ஜெகனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவார். இந்தமுறை மாதவன் ஜெகனுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் நடிக்க ஒரு வாய்ப்பு

இந்தியன் 2 படம் பல தடைகளை, பல வதந்திகளை கடந்து அடுத்த மாதம் தொடங்கயிருக்கிறது. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துணை, இணை கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் தேவை என லைகா அறிவித்துள்ளது. ஆண், பெண் இருபாலரும் தேவை. வயது கட்டுப்பாடு கிடையாது. நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் மெயில் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here