சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது சாம்சங் நிறுவனம் 1டிபி ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் சாம்சங் கேலக்ஸியின் நோட் 9 512 ஜிபி ஸ்மார்ட்போனுடன் இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டு தள்ளுபடி விலையில் ரூ. 4,999க்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 9, 512ஜிபி வேரியண்ட் சாம்சங் இவோ பிளஸ் மெமரி கார்டு தொகுப்புடன் ரூ. 89,999 விற்பனை செய்யப்படுகிறது. அதன் உண்மையான விலையான ரூ.107,900லிருந்து ரூ.17,900 தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. சாம்சங் இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டின் உண்மையான விலையான ரூ.22,900 தற்போது தள்ளுபடியில் ரூ.4,999க்கு கிடைக்கிறது.

ஹெச்டிஎஃப்சி கிரேடிட் கார்ட், டெபிட் கார்ட் பயன்படுத்தி எக்ஸ்சேன்ஜ் முறையில் குறிப்பிட்ட சில பழைய போன்களை கொடுத்து இந்த ஆஃபரில் மெமரி கார்டுகளை வாங்குபவர்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த ஆஃபரினை ஆன்லைன் மற்றும் கடைகளில் மட்டுமே பெற முடியும். இந்த வேரியண்ட் மிட்நைட் பிளாக், ஓஷன் புளூ, மெட்டாலிக் காப்பர் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.67,900 ஆகும்.

டூயல் சிம் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 6.4இன்ச் ஹெச்டி மற்றும் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்பிளேயினைக் கொண்டது. மேலும் இதில், ஆக்டோ கோர் Exynos 9810SoC பிராசசரையும் கொண்டுள்ளது. 512 ஜிபி வேரியண்ட் ஆனது 8ஜிபி ரேமையும், 128ஜிபியானது 6ஜிபி ரேமுடனும் கிடைக்கிறது.

இரண்டிலும் 512ஜிபி வரையிலான மைக்ரோSD கார்டுகளை இணைத்துக்கொள்ளலாம். கேலக்ஸி நோட் 9 கேமராவைப் பொற்த்த வரை பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. 12 மெகா பிக்சல் டூயல் சென்சார், 12 மெகா பிக்சல் சென்சார் மற்றும் செல்ஃபிக்கு 8 மெகா பிக்சல் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சாரானது பின்பக்கம் இருக்கும் கேமராவிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 4,000mAh பேட்டரியினை கொண்டுள்ளது.

https://twitter.com/SamsungMobileIN/status/1070390201044873216

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here