அஹமது இயக்கத்தில் அடங்க மறுக்கும் ஜெயம் ரவி

0
222

ஜெயம் ரவி நடித்துள்ள சக்தி சௌந்தர்ராஜனின் டிக் டிக் டிக் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்க ஆரம்பித்த படம், அடங்க மறு. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்வேலு இயக்கம்.

அடங்க மறு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடும் முடிவில் இருக்கிறார்கள். இதையடுத்து ஜெயம் ரவி அஹமது இயக்கத்தில் நடிக்கிறார்.

வாமனன் படத்தை இயக்கிய அஹமதுக்கு என்றென்றும் புன்னகை வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு உதயநிதியை வைத்து மனிதன் படத்தை இயக்கினார். இந்திப் படம் ஜாலி எல்எல்பி யின் ரீமேக் அது. அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்