அஸ்ஸாமில் மாட்டுக் கறி விற்றதாக கூறி ஒருவரை பன்றிக்கறி சாப்பிட வைத்த கொடூரம்

0
329

அஸ்ஸாம் மாநிலத்தில் பிஸ்வானாத் மாவட்டத்தில் மாட்டுக் கறி விற்றதாக கூறி  முஸ்லீம் ஒருவரை  பன்றிக் கறி சாப்பிட வைத்த கொடூரம்  நடந்தேறியுள்ளது. முட்டிக்கால் போடப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் தன்னை விட்டு விடுமாறு கேட்கும் வீடியோ  ஒன்று வைரலாகியுள்ளது. 

ஷவுகத் அலி (68) தாக்குதலுக்கு உள்ளானதோடு பன்றி இறைச்சி சாப்பிட  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் செயலை உள்ளூர் நபர்களே செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இது குறித்து என் டி டிவி மாவட்ட காவல்துறையினரிடம் கேட்ட போது, தனித்தனியாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளனர். அதில் ஒன்று சவுகத் அலியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை தொடங்கி வீடியோவில் உள்ள நபர்களைத் தேடி வருகின்றனர். 

ஷவுகத் அலியை மிரட்டிய கும்பல் அவரை மாட்டிறைச்சி விற்க உரிமம் பெற்றுள்ளாரா என்று கேட்டு மிரட்டியுள்ளது. மேலும், பங்களாதேஷில் இருந்து வந்தவரா,  இல்லையா என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர். 

“நீ பங்களாதேஷத்தை சேர்ந்தவனா…? இந்திய குடியுரிமைக்கான பட்டியலில் உன் பெயர் உள்ளதா…? ” என்று கேட்டி மிரட்டியுள்ளனர். அஸ்ஸாமில் சட்ட விரோத குடிமக்களை களைவதற்கு குடிமக்களின் தேசியப் பதிவை அமல் படுத்தியுள்ளது. 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வரைவில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ள பட்டியலை வெளியிட்டது.  அதில் 3,29,91,384  விண்ணப்பதாரர்கள் அந்தப் பட்டியலில் இல்லை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “ குடிமக்களின் தேசிய பதிவு பிரச்னைகள் விரைந்து முடிக்கப்படும்” என்று கூறியுள்ளது. 

பிஸ்வானாத் மாவட்டம் தேஜ்பூர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. ஏப்ரல் 11 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 

 

https://www.ndtv.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here