நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (மார்ச்.5) தொடங்கியது. முதல்நாள் அமர்விலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல்நாள் அமர்விலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

mp

அவை தொடங்குவதற்கு முன்னர், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு அவைகளும் ஒத்திவைப்பு

அவை அலுவல் நடவடிக்கைகள் தொடங்கும் முன்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை தொடங்கியது. அப்போது காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் நீரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி அவையில் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அதேபோன்று, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

rajya

இதனையடுத்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட்தால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர், 12 மணிக்கு மக்களவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here