அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான தங்கதமிழ்ச்செல்வன், அவையை வெளிநடப்பு செய்தார்.

அதிமுகவில் தற்போது மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 34 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் அவர்கள், டிடிவி தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து வலியுறுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில், விடுமுறைக்குப் பின்னர், சட்டப்பேரவை திங்கட்கிழமை (இன்று) மீண்டும் கூடியது. அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி மூன்றாண்டுகளாகியும் பணிகள் நடைபெறாததைக் கண்டித்து தங்கதமிழ்ச்செல்வன் அவையை வெளிநடப்பு செய்தார். தங்கதமிழ்ச்செல்வனின் வெளிநடப்பை, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : லவ்வுன்னு சொல்லி திருநங்கைகளை ஏமாத்துறாங்க

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்