அவர்கள் மீது அன்பை செலுத்துவோம் : நடிகை மிருணாளினி

Mirnaliniravi urges fans to treat those who test positive for #coronavirus with kindness.

0
102

நடிகை மிருணாளினி, சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்தவர். தற்போது விக்ரமுடன் கோப்ரா, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு அவமதிப்பதை கண்டித்து மிருணாளினி கூறியிருப்பதாவது:-

நீங்கள் வசிக்கும் இடங்களின் அருகில் யாரோனும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டால் தயவு செய்து அவர்களை போட்டோ எடுக்காதீர்கள். மாறாக கட்டை விரலை உயர்த்தி குணமடைந்து திரும்புங்கள் என வாழ்த்தி அவருக்கு நம்பிக்கை கொடுங்கள். இந்த நோய் தொற்றுஏ ற்பட்டவர் குற்றவாளி இல்லை. அவர்களை அவதூறு செய்யாதீர்கள், பயமுறுத்தாதீர்கள். அவர்கள் மீது அன்பை செலுத்துவோம்.  நாளைக்கு நமக்கும் இந்த நோய் தொற்று ஏற்படலாம். பாதுகாப்பாகவும் நம்பிக்கையோடும் வீட்டிலேயே இருங்கள்” என மிருணாளினி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here