பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக் காவலர்கள் அப்பாவி மக்களை அடித்து கொலை செய்தும், துன்புறுத்தியும் வருவது பாஜக அரசில் அதிகமாக நடந்து வருகிறது .

பசுவின் பெயரால் கொலை செய்து ஜாமீனில் வெளிவந்திருக்கும் குற்றவாளியை மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களுடன் என் டி டிவி குழு சந்தித்தது .

குற்றவாளிகளைச் சந்திக்க ஆர் எஸ் எஸ் மற்றும் மற்ற இந்து மதவாத குழுக்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தாங்கள் ஈடுபடுவதாக காட்டிக் கொண்ட என் டி டிவி குழு (NDTV) , 2 மாநிலங்களில் பசுக்காக கொலை செய்த 2 குற்றவாளிகளை சந்தித்தது .

அப்போது என்டிடிவி-யைச் சேர்ந்த நிருபர்கள் குழு பசுக்காக தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரை, அவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்கள் பேசுவதை பதிவு செய்தது . வீடியோவில் அந்த குற்றவாளிகள் அவர்கள், கொலை செய்தது குறித்து பகிரங்கமாகவும் அப்பட்டமாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

முதலில் உத்தர பிரதேசத்தில் ஹாப்பூருக்கு என் டி டிவி குழு சென்றது. அங்கு ஜூன் 18 ஆம் தேதி, காசிம் குரேஷி என்கிற நபர் பசுவை கடத்தினார் என்று குற்றம் சாட்டி பசுக்காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல 65 வயதான விவசாயி சமயுதீன் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

ஹாப்பூரில் இருக்கும் பஜேதா குர்த் கிராமத்துக்கு சென்றது என் டி டிவி குழு. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. 9 பேரில் 4 பேர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். அதில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் ராகேஷ் சிசோடியாவை என் டி டிவி குழு சந்தித்தது .

சிசோடியா நீதிமன்றத்தில் எழுதி கொடுத்த வாக்குமூலத்தில் தனக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் என் டி டிவி குழுவின் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் ராகேஷ் சிசோடியா கூறியது வேறு. அவர் தான் செய்த கொலைப் பற்றி பெருமிதம் கொண்டார்.

64

நான் சிறை அதிகாரிகளிடம், அவர்கள் பசுவைக் கொன்றார்கள். நாங்கள் அவர்களைக் கொன்றோம் என்றேன். நான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த போது என்னை அழைத்துச் செல்ல 3, 4 கார்கள் வந்தன. என் பெயரை சொல்லி வெளியில் இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். என்னை அவர்கள் உற்சாகதோடு வரவேற்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எனது படை தயாராக இருக்கிறது. யாராவது பசுவைக் கொன்றால் அவர்களை நாங்கள் கொல்ல தயாராக இருக்கிறோம். எங்கள் பக்கம் அரசு இருப்பதால், போலீஸும் எங்கள் பக்கம்தான் உள்ளது என்று பகிரங்கமாக பசுவதை தாக்குதல் சம்பவங்கள் குறித்து என் டி டிவி குழுவிடம் பெருமையாக பேசியுள்ளார்.

மேலும் அஸாம் கான் பதவியில் இருந்திருந்தால் எதுவும் நடக்காது . (சமாஜ்வாடி கட்சி உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது) அஸாம் கான் அமைச்சராக இருந்தார்.

“காசிம் குரேஷியை அடித்து தாக்குதல் நடத்திய போது குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் அப்போது அவர் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவர் என்று நான் கூறினேன்”

அதன்பிறகு என் டி டிவி குழு ஹாப்பூரிலிருந்து ராஜஸ்தான், ஆல்வாரில் இருக்கும் பெஹ்ரூர் கிராமத்திற்கு சென்றது .

அங்குதான் பெஹூல் கான், பால் விவசாயி , கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மாட்டை வாகனம் மூலம் எடுத்துச் சென்றதற்கு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விபின் யாதவ் என் டி டிவி குழுவிடம் பேசும் போது நாங்கள் பெஹூல் கானை ஒன்றரை மணி நேரம் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தோம். முதலில் 10 பேர்தான் இருந்திருப்போம். அப்புறம் கூட்டம் அதிகரித்துவிட்டது’ என்று பேசியுள்ளார்.

மேலும் பெஹூல் கான் வாகனத்தில் மாடுகளை கொண்டு சென்ற போது நாங்கள் வாகனங்களை நிறுத்த கூறியும் நிறுத்தாமல் சென்றதால் அவர்களை துரத்தி பிடித்து வாகனத்தின் சாவியை எடுத்தோம் என்றும் பெஹூல் கானை அடித்து கொண்டிருக்கையில் அவர் வாகனத்தின் சாவியை என் பாக்கெட்டிற்குள்தான் வைத்திருந்தேன் எனவும் கூறியுள்ளார்.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here