அவசியம் கருதிதான் மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

கடந்த தீபாவளியன்று நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு தமிழக பாஜக தலைவர்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் எனவும் எச்சரித்தனர். இப்பிரச்சினையில் விஜய்யை ஜோசஃப் விஜய் என்றும், மத ரீதியாகவும் கடுமையாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் விகடன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது, நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய விஜய், தமிழர் திருநாளில் இந்த விருது தனக்குக் கிடைத்ததில் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார். இப்படத்தில் வரும் சர்ச்சைகள் வரும் என்று தனக்கு முன்பே தெரியும் என்றும், அவசியம் கருதிதான் மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைத் தான் பேசியதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here