மாலத்தீவுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கெதிரான போராட்டம் வலுவடைந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

மாலத்தீவுகளில் நடப்பது என்ன?

2013ஆம் ஆண்டு முதல் மாலத்தீவுகளுக்கான அதிபராக அப்துல்லா யாமீன் உள்ளார். இந்நிலையில் இவரது கட்சியைச் சேர்ந்த (Progressive Party of Maldives) நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர், தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் எதிர்க்கட்சியின் பலம் அதிகரிக்கும் என்பதால் இந்த 12 பேரையும் அதிபர் அப்துல்லா யாமீன் தகுதி நீக்கம் செய்தார். இந்தத் தகுதி நீக்கம் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த 12 பேருக்கும் மீண்டும் உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

அதிபர் அப்துல்லா யாமீன்
அதிபர் அப்துல்லா யாமீன்

இதனால் ஆளும்கட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் நாடாளுமன்றம் காலவரையின்றி முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்பது பேரை விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

mal

அவசரநிலை பிரகடனம்

அரசியல் நெருக்கடியால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதனால் அவர் 15 நாட்களுக்கு அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

உச்சநீதிமனற தலைமை நீதிபதியும் கைது

இதனைத்தொடர்ந்து முன்னாள் அதிபர் அப்துல் கய்யூம் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அலி ஹமீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாலத்தீவு முழுவதும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்