தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசர உதவி ஆம்புலன்ஸ் எண் 108 சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த பாதிப்பு விரைவில் சரி செய்யப்படும் என்று பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் வசதிக்காக 044- 40170100 என்ற தற்காலிக சேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அவசர மருத்துவ உதவி ஆம்புலன்ஸ் சேவைக்கு என 108 எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது சென்னை தேனாப்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக இந்த எண்ணிற்கு 4000 அழைப்புகள் வருவது வழக்கமாகும்,. அத்துடன் தமிழகம் முழுவதும் 950 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசர உதவி ஆம்புலன்ஸ் எண் 108 சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த எண்ணுக்கான சேவையைப் பராமரித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத் தரப்பில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே, தற்போது சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்