அவசரம் வேண்டாம், சின்னசாமிகளே!

0
1207

வேலுச்சாமியிடம் உடுமலைப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பெத்த மகனின் உடலைப் பார்க்க வருவதற்கு பஸ் காசுகூட இல்லை; இந்த ஏழை அப்பா பஸ் கட்டணத்துக்கான காசைக்கூட கடன் வாங்கிக்கொண்டுதான் வந்திருக்கிறார்; மகன் சில நாட்களில் என்ஜினீயராகியிருக்க வேண்டியவன்; ஷங்கர் என்று பெயர்; நாட்டுக்கும் வீட்டுக்கும் கிடைத்த பெரிய சொத்தை இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டார்களே என்று வேலுச்சாமி அழுது புலம்புவதை நீங்கள் படங்களில் பார்த்திருப்பீர்கள். தனது ஆசைக்கணவர் ஷங்கர் கல்லூரி விழாவுக்குச் செல்லும்போது நல்ல சட்டை உடுத்திச் செல்ல வேண்டும் என்றுதானே கவுசல்யா சம்பளம் வாங்கினவுடன் அவருக்குச் சட்டை எடுத்துக்கொடுக்க அழைத்துச் சென்றார். படுபாவிகள் அந்த சந்தோஷத்தில் இப்படி மண் அள்ளிப்போட்டு விட்டார்களே.

ஏழ்மை நிரந்தரமானதல்ல; ஷங்கரின் படிப்பும் கவுசல்யாவின் அன்பும் அதனைச் சுலபமாக வெற்றி கண்டிருக்கும். ஆனால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் குரோதத்தை வெல்லுவது எப்படி? அந்த வெறுப்பை அன்பாக, பக்குவமாக மாற்றுவது எப்படி? சிறையிலிருந்தபடியாவது தன் மகளின் வலியை, கண்ணீரை சின்னசாமி நினைத்துப் பார்ப்பாரா? மகளை வாழ வைக்க வேண்டிய நான் அவளை அழிக்கத் துணிந்துவிட்டேனே என்று ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவாரா? அவரது ஒருசொட்டுக் கண்ணீரிலிருந்து எழுந்து நிற்கும் கவுசல்யாவின் வாழ்வு; தைரியமாக ஷங்கருக்குப் பொறுப்பேற்றிருந்த கவுசல்யா தன் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவார்; அவரை அவர் போக்கில் வாழவிடுங்கள். இறைவன் கொடுத்த உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்