ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை விரும்பும் மக்கள் சார்பாக இக்கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டு மீதான தடையால் நாட்டு இன மாடுகள் அழிந்து போகுமா?

இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், மிருகவதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து உடனடி அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழி ஏற்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், ”ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகிறது என்றால், மீன்பிடி தொழிலில் மீன்களை நீரில் இருந்து வெளியே எடுத்து மூச்சடைக்கச் செய்து இறக்க வைக்கிறார்கள். இது வதை இல்லையா? அப்படியென்றால் மீன்பிடி தொழிலையும், மீன் உண்பதையும் தடை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி : பன்னீர் செல்வம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்