நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாது என மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (National Eligibility and Entrance Test – NEET) இந்தாண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், தமிழக அரசின் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் தமிழக மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிப் போனது.

இந்நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மட்டுமே விலக்களிக்க முடியும் என மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பதே கிடையாது என்றும், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மட்டும் நீட் தேர்விலிருந்து ஓராண்டு காலத்துக்கு விலக்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார.

இதையும் படியுங்கள்: உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்