ஹாட் ட்ரிங்ஸ் சாப்பிடாதவர்கள் கூட பீர் எடுத்துக் கொள்வது சகஜம். அந்த அளவுக்கு பீர் இவ்வுலகில் ஆண்களால் அதிகம் விரும்பப்படும் ஆல்கஹால் வகைகளில் ஒன்று. சரி… ஆனால் பீர் எடுத்துக் கொண்டால் தொப்பை விழும். உடல் எடை அதிகரிக்கும் என்பது தானே அதைக் குறித்த பொதுவான குற்றச்சாட்டு. ஆனால், பீரிலும் கூட எக்கச்சக்கமான ஹெல்த் பெனிஃபிட்டுகள் உண்டு என்கிறார்களே? அது நிஜமா? அப்படியென்ன விதமான ஹெல்த் பெனிஃபிட்டுகளை பீர் அளிக்கக்கூடும் என்று பார்க்கலாமா?!

 • பீர் மனிதனின் சிறுநீரகங்களைப் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஃபின்லாந்து ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. பீர் மனிதனின் சிறுநீரகங்களை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள உதவுகிறதாம். நீங்கள் அருந்தும் ஒவ்வொரு பாட்டில் பீராலும் நீங்கள் உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றக்கூடிய ஆபத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். 40% சிறுநீரகக் கற்கள் வராமல் தடுத்து சிறுநீரை நீர்க்கச் செய்வதில் பீர் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறது ஃபின்லாந்து ஆய்வுக் கட்டுரை.
 • பீர் அதிலும் டார்க் பீர் என்று குறிப்பிடக்கூடிய பீரில் ஒரு கிராம் அளவில் கரையக்கூடிய ஃபைபர் (நார்ச்சத்து) இருப்பதால் குடல் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்க பீர் உதவுகிறது. ஏனெனில் மனிதக் குடல் பகுதியில் நார்ச்சத்து குறைபாடு இருந்தால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களுக்கான அறிகுறிகள் தோன்றுவது இயற்கை. அம்மாதிரியான குடல் நோய் சம்மந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நார்ச்சத்து பீரோடு ஒப்பிடுகையில் திராட்சை ரசத்தில் கூட அவ்வளவாக இருப்பதில்லை.
 • உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பீர் அருந்தலாம். பீரில் இருக்கக்கூடிய 1 கிராம் கரையக்கூடிய ஃபைபர் மூலக்கூறானது மனித உடலில் உள்ள LDL என்று சொல்லப்படக்கூடிய கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது
 • பீர் அருந்துவதால் மனித உடலில் உள்ள விட்டமின் ‘பி’ லெவல் உயர்கிறது என்கிறது ஒரு டச்சு பல்கலைக் கழக ஆய்வு முடிவு. பீரில் இயற்கையாகவே B1, B2, B6, B12 எனப்பலவிதமான B விட்டமின்கள் இருப்பதால் பீர் அருந்துவோருக்கு 30 % விட்டமின் B6 சத்துக்கள் அதிகமாகக் கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அளவீடு திராட்சை ரசம் அருந்துவோருக்குக் கிடைக்கக் கூடிய விட்டமின் B சத்துக்களை விட இரண்டு மடங்கு அதிகமாம். அது மட்டுமல்ல பீர், விட்டமின் B12 சத்தை வாரி வழங்குவதில் கில்லாடியாம். B12 விட்டமின் என்பது ரத்த சோகைக்கு எதிரான விட்டமின்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 • அது மட்டுமல்ல பீர் நமது எலும்புகளை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறதாம். 2009 ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட ஆய்வொன்றின் படி பீரில் இருக்கக் கூடிய அதிகளவிலான சிலிகான் லெவல்களால் அதை அருந்துபவர்களுக்கு எலும்பின் வலுமை கூடுகிறதாம்.
 • பீர் அருந்துவதால் தூக்கமின்மை நோயும் குணமாகிறதாம். ஏனெனில் பீரில் இருக்கக் கூடிய லாக்டி ஃபிளேவின் மற்றும் நிகோடினிக் அமிலம் இரண்டுமே தூக்கத்தை புரமோட் செய்வதில் சமர்த்து.
 • பீர் அருந்துபவர்களுக்கு, பீர் அருந்தாதவர்களை விட 40 முதல் 60 % அளவுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடிய சாத்தியம் குறைவாம்.
 • பீர் அருந்துபவர்களுக்கு அடிக்கடி ரத்தக் குழாய்களில் ரத்தம் உறையும் குறைப்பாடு இருந்தால், அது படிப்படியாகக் குறைந்து குணமாகும் வாய்ப்புகள் அதிகமாம். பீர் தயாரிப்பில் பயன்படுத்தப் படும் மூலப்பொருட்களுக்கு ரத்தம் உறைதலை கட்டுப்படுத்தும் குணம் உண்டாம்.
 • பீர் அருந்துவதால் மனிதனின் நினைவாற்றல் கூடுமாம். அதுமட்டுமல்ல, பீர் அருந்துபவர்களுக்கு அருந்தாதவர்களைக் காட்டிலும் அல்ஸைமர் நோய் மற்றும் டிமென்சியா உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு என்கிறடு ஒரு ஆய்வறிக்கை.
 • வேலை நிமித்தம் வரக்கூடிய மன அழுத்தம் மற்றும் பதற்றம் இரண்டையுமே குறைக்க ஒரே வழி நாளொன்றுக்கு இரண்டு கிளாஸ் பீர் அருந்துவது மட்டுமே என்கிறது மாண்ட்ரீல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுக் கட்டுரை முடிவொன்று.
 • கடுமையான சளித் தொந்திரவு இருந்தால் அதைக் குறைப்பதற்கும் பீர் அருந்துவது நல்லதாம். அது மட்டுமல்ல பீர் அருந்துவதால் தசைப்பிடிப்பு, மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைப்பதோடு உடலில் நோய் எதிர்ப்ப்ய் சக்தியும் அதிகரிக்குமாம். அதற்கு ஒரு பாட்டில் பீரை டபுள் பாய்லர் வைத்து சூடாக்கி அதில் 4 சிறிய டீஸ்பூன் விகிதம் தேன் சேர்த்து தினமும் சிறிதளவு அருந்தி வந்தால் மேற்கண்ட பலன்கள் கிடைக்குமாம்.
 • பீர் அருந்துவதால் உடல் சருமம் பொலிவுறும். பீரில் உள்ள சில விட்டமின்கள், சரும செல்களைப் புனரமைத்து சரும நிறம் மாறிக் கருத்துப் போகாமலிருக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல சருமம் மென்மையாகவும் புஷ்டியாகவும் மாறவும் பீர் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here