இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியோடு இங்கிலாந்து அணியின் அலஸ்டர் குக், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அலஸ்டர் குக் தனக்கு விருப்பமான சிறந்த 11 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். கேப்டனாக கிரஹம் கூச், தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஹைடன், பிரயன் லாரா ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், ரிக்கி பாண்டிங், ஏபி டிவில்லியர்ஸ், குமார் சங்ககரா, காலீஸ், முத்தையா முரளிதரன், ஷேர்ன் வார்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், மெக்ராத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அலஸ்டர் குக்கின் இப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒருவரது பெயர் கூட இடம் பெறவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

அலஸ்டர் குக் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில், 32சதங்கள், 56 அரை சதங்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 294 ரன்களும், மொத்தம் 12554 ரன்களை டெஸ்ட் தொடரில் அடித்துள்ளார். 44.88 சராசரி பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here