அற்புதம்… அற்புதம்… விக்ரம் வேதாவுக்கு ரஜினியின் ரியாக்ஷன்

0
284

விக்ரம் வேதா படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்திடம், ‘அற்புதம்… அற்புதம்… கிளாசாக எடுக்கப்பட்ட மாஸ் படம்’ என்று பாராட்டியுள்ளார்.

விக்ரம் வேதா படம் வெளியான நாள்முதல் தமிழகம் முழுவதும் கூட்டம் அள்ளுகிறது. வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. சூர்யா, ஆரியா, கார்த்திக் சுப்பாராஜ் போன்ற திரையுலக பிரபலங்கள் விக்ரம் வேதா படக்குழுவுக்கும் நடித்த மாதவன், விஜய் சேதுபதிக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் அற்புதம்… அற்புதம்… கிளாசாக எடுக்கப்பட்ட மாஸ் படம் என்று பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் தெரிவித்தார்.

இதையே அவர் தங்களிடமும் தெரிவித்ததாக படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தங்களின் ட்விட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபமாக வெளிவந்த தமிழ்ப் படங்களில் விக்ரம் வேதாவுக்கே அதிக வசூல் என்பதும், சென்னையில் முதல் மூன்று தினங்களில் 1.76 கோடியும், தமிழகத்தில் பத்து கோடிக்கு அதிகமாகவும் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்கள்: “மக்களைப் பத்திப் பேசினா தேசவிரோதி என்கிறார்கள்; இந்த நிலை மாற வேண்டும்”: டி.எம். கிருஷ்ணா

இதையும் பாருங்கள்: அடக்க அடக்க மக்கள் திமிறி எழுவார்கள்”

இதையும் பாருங்கள்: எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

இதையும் பாருங்கள்: World Cinema – ஹிமாலயா (1999)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்