ராஜஸ்தானின் மூத்த பாஜக எம் எல் ஏ கன்ஷ்யாம் திவாரி , வசுந்தரா ராஜே அரசிலிருந்து ராஜினாமா செய்தார். இவர் வசுந்தரா ராஜேவின் அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். ராஜஸ்தான் மாநிலத்திலும், இந்தியாவிலும் அறிவிக்கப்படாத அவசர நிலை நடந்து வருகிறது அதனை எதிர்த்து போராடுவேன் என்று தான் ராஜினாமா செய்த பிறகு கூறியுள்ளார்.

வசுந்தரா ராஜேவின் அரசில் இருந்துக் கொண்டே விவசாயிகள் பிரச்சனை, அரசின் ஊழல், உயர் சாதியினருக்காக இட ஒதுக்கீடு போன்றவற்றிற்காக அரசிடம் கோரிக்கைகளை வைத்திருக்கிறார். கன்ஷ்யாம் திவாரி ராஜஸ்தான் பாஜக மாஃபியா கும்பல் போல் செயல்படுகிறது என்றும் பாஜகவில் நல்ல திறமையான தலைவர்களை பாஜக தலைமைக் கண்டு கொள்வதில்லை என்றும் வசுந்தராராஜேவின் அரசையும், பாஜக தலைமையையும் விமர்சித்துக் கொண்டே இருந்ததாலும் தேசிய ஒழுங்குமுறைக் குழு 2017 இல் இவருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியது .

2013 சட்டமன்றத் தேர்தலில் கன்ஷ்யாம் திவாரி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (65,350) காங்கிரஸ் வேட்பாளரை வென்றார்.

வசுந்தரா ராஜே தலைமை ராஜஸ்தான் அரசு ஊழலில் திளைப்பது பற்றி பலமுறை இவர் அமித் ஷாவிடம் தான் தெரிவித்ததாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் கூறி தன் ராஜினாமாவை சமர்ப்பித்து கட்சியிலிருந்து வெளியேறினார்.

ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கன்ஷ்யாம் திவாரி நாட்டில் தற்போது அறிவிக்கப்ப்டாத அவசர நிலை இருக்கிறது. இது அறிவிக்கப்ப்ட்ட அவசர நிலையை விட மோசமானது என்றும் பாஜகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது, சட்டத்திட்டங்கள் எதுவும் இல்லை, கட்சியில் ஊழல் மலிந்துள்ளது என்றும் கூறினார்.

நான் அறிவிக்கப்பட்ட அவசர நிலையையும், தற்போது இருக்கிற அறிவிக்கப்படாத அவசர நிலையையும் உணர்ந்திருக்கிறேன் அதனால் என்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக போரட உள்ளேன் என்றும் கூறினார்.

1975 இல் இந்திரா காந்தி அறிவித்த அவசர கால நிலை நினைவு நாளை பாஜக கருப்பு நாளாக அனுசரிக்கிறது.ஆனால் பாஜக அரசின் 4 ஆண்டு காலமும் அறிவிக்கப்படாத அவசர நிலையாகவே இருந்துள்ளது. என்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் .

நீதித்துறை, சட்ட அமலாக்கத்துறை, ஊடகம் ஆகியவற்றில் பாஜகவின் மறைமுகமான தலையீடுகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இது அவசர நிலை காலத்தில் காலக்கட்டத்தில் இருந்ததைவிடவும் அபாயகரமானவை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here