ஹுவாய் இந்தியா நிறுவனம் நேற்று(வியாழக்கிழமை) ஹுவாய் நோவா 3(#HuaweiNova3) மற்று நோவா 3ஐ(#HuaweiNova3i), நாட்ச் டிஸ்பிளே மற்றும் வெர்ட்டிக்கல் கேமரா கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை டெல்லியில் அறிமுகம் செய்தது.

ஹுவாய் நோவா 3 சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன், இரண்டு நானோ சிம் ஸ்லாட்கள் கொண்டது. 6.3 இன்ச் முழு ஹெச்.டி தொடு திரையும் இதில் உள்ளது. ஆக்டா கோர் ஹுவாய் ஹை சிலிக்கான 907 பிராஸசரும் 6 ஜி.பி ரேமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பின் பகுதியில் இருக்கும் டூயல் கேமராவில், 16 மெகா பிக்ஸல் சென்சார் மற்றும் 24 மெகா பிக்ஸல், இரண்டாவது சென்சாரும் இருக்கிறது. முன்பக்கத்திலும் 24 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் சென்சார்களும் உள்ளன.

128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில், 256 ஜி.பி வரை ஸ்டோரேஜை, மெமரி கார்டு மூலம் நீட்டித்துக் கொள்ளலாம்.

6 ஜி.பி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் கொண்ட நோவா 3 மொபைலின் விலை 34,999 ரூபாய்.

நோவா 3ஐ சிறப்பம்சங்கள்:

இரண்டு நானோ சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. 6.3 இன்ச் முழு ஹெச்.டி தொடு திரையும், ஆக்டா கோர் ஹுவாய் ஹை சிலிக்கான 710 பிராஸசரும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின் பகுதியில் இருக்கும் டூயல் கேமராவில், 16 மெகா பிக்ஸல் சென்சார், 2 மெகா பிக்ஸல் இரண்டாவது சென்சாரும் இருக்கிறது. இதே போல் முன்பக்கத்திலும் டூயல் கேமரா இருக்கிறது. 24 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் சென்சார்களும் உள்ளன.

4 ஜி.பி ரேமும், 128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில், 256 ஜி.பி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளலாம்.

4ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட நோவா 3ஐ மொபைலின் விலை 20,990 ரூபாய்.

கருப்பு மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் இரண்டு மொபைல்களுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

அறிமுக சலுகைகளாக, 2000 ரூபாய் எக்ஸ்சேஞ் ஆஃபர், கட்டணமில்லா இ.எம்.ஐ, ஜியோவின் 1,200 கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. நோவா 3 ஆகஸ்ட் 23-ம் தேதியும், நோவா 3ஐ ஆகஸ்ட் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

https://twitter.com/HuaweiIndia/status/1022712901184958465

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here