ஆப்பிள் நிறுவனம் 2019 ஆம் ஆண்டிற்கான புதிய ஐபேட் மினி மற்றும் 10.5 இன்ச் ஐபேட் ஏர் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இவை இரண்டுமே ஆப்பிளின் சக்திவாய்ந்த ஏ12 பயோனிக் சிப்செட்டுடன் வெளிவந்திருக்கின்றன.

புதிய ஐபேட் மினி, ஆப்பிள் பென்சில் வசதியுடன் அதிநவீன ரெட்டினா டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே, ட்ரூ டோன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இரண்டுமே 8 எம்.பி. பிரைமரி கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வசதியுடன் கிடைக்கிறது.

முன்பக்கம் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பென்சில் வசதியுடன் கிடைக்கும் புதிய ஐபேட் மினி கொண்டு ஸ்கெட்ச் அல்லது குறிப்பு எடுத்துக்கொள்ளலாம்.

இதில் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி வைபை மாடல் விலை ரூ.34,900, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.45,900 என விற்பனை செய்யப்படுகிறது.

ஐபேட் ஏர் 10.5 இன்ச் வைபை மாடல் விலை ரூ.44,900 என்றும் வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆப்பிள் பென்சில் சாதனம் ரூ.8,500 விலையில் கிடைக்கிறது. 10.5 இன்ச் ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு ரூ.3500 விலையில் தனியே விற்பனை செய்யப்படுகிறது.

2019 புதிய ஐபேட் மினி மற்றும் ஐபேட் ஏர் மாடல்கள், சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஐபேட் மாடல்கள் இந்தியாவில் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here