கூல்பேட் நிறுவனம் ”கூல்பேட் கூல் 3”( Coolpad Cool 3) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெகா 5, மெகா 5 எம் மற்றும் மெகா 5 சி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன், ஆண்டிராய்டு 9 பை இயங்குதளம், வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைலில் டிஸ்பிளே மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் வெளிவரவுள்ளது. ‘ஃபேஸ் அன்லாக்’ குடன், 1.3GHz ஆக்டா கோர் பிராசஸ்சரை கொண்டு செயல்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி, கைவிரல் ரேகை சென்சார்(பின்புறம்) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இது 3,000mAh பேட்டரி மற்றும் 5.71 இஞ்ச் ஹெச்-டி டிஸ்பிளேயுடன் வருகிறது.

கூல்பேட் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான கூல்பேட் மெகா 5, ரூ.6,999க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய கூல்பேட் கூல் 3 வகை ஸ்மார்ட் போன் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன், மீட்நையிட் புளூ, ரூபி பிளாக், ஓசியன் இன்டிகோ மற்றும் ரீல் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

இது ஆன்லையின் மூலமும் மற்றும் கடைகளிலும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here