பேடிஎம் நிறுவனம் தனது முதல் கிரடிட் கார்ட் ஒன்றை வெளியிடவுள்ளது. “பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்” என அந்த கிரடிட் கார்டுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரடிட் கார்டுகள் ஒரு சதவிகித “யூனிவர்சல் அன்லிமிடெட் கேஷ்பேக்” சலுகையை கொண்டு வரவுள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் இந்த கார்டுகளை பெற எந்த ஒரு நிபந்தனையையும் அந்த நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை. முன்னதாக இந்த “பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்”-க்கு ரூ.500 ஆண்டு கட்டணமாக விதிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் இந்த கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால், அந்த ஆண்டு கட்டணம் தளர்த்தப்படும்.

வாடிக்கையாளர்கள், நேரடியாகவே பேடிஎம் செயலியில் இந்த கார்டுக்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த கார்டுகளை பயன்படுத்தி 10,000ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, ப்ரோமோ கோட்கள் மூலம் ரூ.10,000 வரையில் சலுகைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த கிரடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ஒரு சதவிகித அன்லிமிடெட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி அனைத்து மாதமும், பணத்தை தானகவே வரவு வைத்துக்கொள்ளும் என இந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த கிரடிட் கார்டுகளுடன் வழங்கப்படும் பாஸ்புக் மூலம், பேடிஎம் மற்றும் சிடி வங்கிகளின் உடனுக்குடனான சலுகைகள் மற்றும் அந்த கார்டு மூலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பரிமாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம்.

முன்னதாக 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அறிமுகப்படுத்திய டெபிட் கார்டுகளை போன்றில்லாமல், இந்த கார்டை உலகில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here