அர்னால்ட் படத்தின் போஸ்டரை காப்பியடித்த தர்பார் டீம் ‘ – நெட்டிசன்கள் கிண்டல்

0
287

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது.  பெரிய பெரிய துப்பாக்கிகள், போலீஸ் சீருடை, போலீஸ் பெல்ட், துப்பாக்கிக்குண்டு, கைவிலங்கு, மோப்ப நாய் என முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக போஸ்டர் அமைந்துள்ளது. 

போஸ்டருக்கு நடுவே ரஜினிகாந்த் வட்டவடிவ கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு  வில்லத்தனமாக சிரிக்கிறார். இந்த போஸ்டர், சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினியை மீண்டும் போலீஸ் வேடத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மும்பையில் நடக்கும் போலீஸ் ஸ்டோரியாக தர்பார் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  தர்பார் திரைப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த போஸ்டர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பில் 2017ல் வெளியான ‘கில்லிங் கந்தர்’ படத்தின் போஸ்டர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு போஸ்டர்களிலும் உள்ள துப்பாக்கிகள், நடுவில் ஹீரோ என்பது போன்ற பொதுவான விஷயங்களை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள். எது எப்படியோ போஸ்டர் நன்றாக இருப்பதாக மற்றொரு தரப்பினர் விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here