பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட 17 வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் பிரிவில், சேலம் மாவட்டத்தில் திவட்டிபட்டியை அடுத்த பெரிய வடக்கம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். அதே போட்டியில் மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் வெண்கலம் வென்றார். இந்நிலையில், மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விருது அறிவிக்கப்பட்டவர்கள்: மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்); குஷ்பிர் கவுர் (அத்லெடிக்ஸ்); அரோகின் ராஜீவ் (அத்லெடிக்ஸ்); பிரசாந்தி சிங் (கூடைப்பந்து); தேவேந்திர சிங் (குத்துச்சண்டை); புஜாரா (கிரிக்கெட்); ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்); ஆனியம் பெம்பெம் தேவி (கால்பந்து); சாவ்ரசியா (கோல்ஃப்); சுனில் (ஹாக்கி); ஜஸ்விர் சிங் (கபடி); பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்); அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்); சகேத் மைனேனி (டென்னிஸ்); சத்யவர்த் காடியன் (மல்யுத்தம்); வருண் பாட்டி (பாரா அத்லெடிக்ஸ்); சுரேகா (வில்வித்தை).

இதையும் படியுங்கள்: சும்மா ஸ்பீட் அள்ளுது இந்த நெட்வொர்க்கில்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்