ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று(வெள்ளிக்கிழமை) காலிறுதி ஆட்டங்கள் ஆரம்பித்தன. முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் கவானி இதற்கு முந்தைய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக களம் இறங்கவில்லை. இது உருகுவே அணி க்கு மைகப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது. பிரான்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் தன் முழு பலத்துடன் களம் இறங்கியது.

முதல் பாதி ஆரம்பத்திலிருந்தே பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது. பிரான்ஸ் அணியின் வேகமான ஆட்டத்தின் பலனாக ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. முதல் பாதி யில் எவ்வளவோ முயன்றும் உருகுவே அணியால் பிரான்ஸ் அணியின் டிபென்சை மீறி கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்ட்த்திலும் பிரான்ஸ் அணியின் எதிரணியின் கோல் எல்லையை நோக்கிப் பந்தை கடத்திச் செல்லும் வேகம் குறையவே இல்லை. இதன் காரணமாக 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை ஆக்ரோஷமாக அடித்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

இதன் பின் உருகுவே அணி கோல் அடிக்க பலமுறை முயற்சித்தும் எந்தப் பலனும் இல்லாமல் போனது. கூடுதலா கொடுக்கப்பட்ட 5 நிமிடங்களிலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Dhbu_e3X0AM1Qqh

DhbwT_aW4AA8brW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here