பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 12,600 கோடி ரூபாய் வரை கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

rahul-1

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மவுனம் காப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மற்ற வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்ட அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்துவதுபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக ஆஜராகும் அருண்ஜேட்லியின் மகளின் சட்ட அலுவலகத்தில் மட்டும் சோதனை நடத்தாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children