அரசை எதிர்த்தால் ட்ரோல் ஆர்மியால் குறிவைக்கப்படுவது நல்லதல்ல; ஆட்சியில் இருப்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் – ரகுராம் ராஜன்

Governments should learn to tolerate criticism, suppressing it can lead to mistakes: Raghuram Rajan

0
382

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சனங்களை அடக்குவது அரசுக்கு நன்மை தராது . ஆட்சியில் இருப்பவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் , விமர்சனங்கள்தான் நல்ல முடிவுகளை எடுக்கத் தூண்டும்  என்று தெரிவித்துள்ளார். 

கருத்து வேறுபாடுகளை , விமர்சனங்களை அடக்குவது மோசமான கொள்கைகளை நிறைவேற்ற வழிவகுக்கும். ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் முக்கியமானது.  மக்களின், எதிர்க்கட்சிகளின்  விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாதது, அடக்குவது  தவறான கொள்கை முடிவுகளை எடுக்க வழிவகுக்கும் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.  

அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். 

விமர்சனம்தான் காலத்திற்கேற்ற வகையில் அரசாங்கம் சரியான முடிவுகளை எடுக்கத் தூண்டும். ஒவ்வொரு விமர்சகருக்கும் அரசாங்க செயல்பாட்டாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் அல்லது ஆளும்கட்சியின் ட்ரோல் ஆர்மியினால்  (troll army)   குறிவைக்கப்பட்டால் பலர் தங்களின் விமர்சனத்தை குறைத்துக் கொள்வார்கள். அதன்பின்  அரசாங்கம் இனிமையான நம்பகமான சூழலில் செயல்படுவதாக எண்ணிக்கொள்ளும். ஆனால், கடுமையான உண்மையை மறுக்க முடியாது. 

சந்தேகத்திற்கு இடமின்றி, பத்திரிகைகள் உட்பட சில விமர்சனங்கள் தவறான தகவல்களாலும் தனிப்பட்ட தாக்குதல்களாவும் உள்ளன. ஆனால்,  விமர்சனத்தை கட்டுப்படுத்துவது தீய செயல்முறையாக இருக்கும் என்று தனது லிங்க்டினில் (Linkedin) பதிவிட்டுள்ளார். 

தற்போது சிகாகோ பல்கலைகழகத்தில் நிதித்துறை பேராசிரியராக இருக்கும் ராஜன் ‘விமர்சனம் தான் கொள்கைகளை சரி செய்ய அனுமதிக்கிறது’  என்று கூறினார். ‘விமர்சனங்களை அடக்கும் அரசாங்கங்கள் தங்களை தாங்களே அவதூறு செய்வதற்கு ஒப்பானது” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

பொருளாதாரக் குழுவில் இருந்து ரதின் ராய் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோரை நீக்கியதற்கு  காரணம் அவர்கள் அரசின் கொள்கைகள் மீது விமர்சனம் செய்ததனால் நீக்கப்பட்டதாக கூறியுள்ளார் ரகுராம் ராஜன் . 

http://ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here