ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மருத்துவத் துறையில் தேசிய அளவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளது. ஆனால், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசு மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்கக் கோரியும், காலமுறை ஊதியம் வழங்கக் கோரியும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், அதன்பேரில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (டிச.4) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் மருத்துவமனைக்கு வந்த வெளி நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பரிதவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here