மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : ஒரு லட்சம் ஐடி பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் : என்ன செய்ய முடியும் – ஐடி பணியாளர்கள் மன்றத்தின் தலைவி பரிமளா

மத்தியப்பிரதேச மாநிலம் கும்ஹாரவா கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்பவருக்கு மே 14ஆம் தேதி இரவு பெண் குழந்தை பிறந்தது. அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லாததால் சுனிதாவை, குழந்தையுடன் தரையில் படுத்துக் கொள்ளுமாறு மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சுனிதா, “மே 15ஆம் தேதி இரவு நான் எழுந்தபோது என் குழந்தையின் கை விரல்களில் ரத்தம் வெளியேறுவதையும், அருகில் எலி ஒன்று ஓடுவதையும் பார்த்தேன். இதன் மூலம் எலி என் குழந்தையைக் கடித்ததை உறுதி செய்தேன்” என கூறினார். இதனையடுத்து எச்சரிக்கையடைந்த மருத்துவமனை நிர்வாகம் சுனிதாவிற்கு ஒரு படுக்கையை அளித்தனர். மேலும் குழந்தை எந்தவித தொற்றும் ஏற்படாமல் இருக்க மருந்து வழங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ’இப்போது இவர்களையும் நீக்க வேண்டுமாம்’: தினமும் ஒரு கோரிக்கை வைக்கும் ஓபிஎஸ் அணி

இதுதொடர்பாக வட்டார மருத்துவ அதிகாரி, எஸ்.எஸ்.குர்ஜர், “குழந்தையின் விரல்களில் கடிபட்டதற்கான அடையாளம் உள்ளது. ஆனால் அது எலிக்கடியா என்பது உறுதியாக தெரியவில்லை” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்