அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து

0
139

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கட்டணத்தை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆங்கில வழிக்கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.