தமிழக அரசு, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசு இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்தோடு, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here