ராஜஸ்தானில் அரசின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 14 மருத்துவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 33 கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாப்ஸ் பெற்று மீண்டும் பணிக்குச் செல்லவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அம்மாநில அரசு எச்சரித்தது. அரசின் எச்சரிக்கையும் மீறி போராட்டம் நடத்திய 14 மருத்துவர்களை அம்மாநில அரசு ரெஸ்மா (Rajasthan Essential Services Maintenance Act – RESMA) சட்டத்தின் கீழ் கைது செய்தது. இதனையடுத்து அரசு மருத்துவர்கள் 100 பேர் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்