‘அரசுக்கு காஷ்மீர்தான் வேண்டும் ,காஷ்மீரிகள் வேண்டாம் ‘ – 370 ரத்து குறித்து குமுறிய காஷ்மீர் மக்கள்

0
463

டெல்லி எந்த திசையில் நகர்ந்தது என்பதைப் பொறுத்து, காஷ்மீர் முகங்களில் இரண்டு விதமான உணர்ச்சி வெளிப்பாடுகள் இருந்தது. அது  கோபம் மற்றும் நம்பிக்கை. ஆனால், டெல்லி 370-வது பிரிவை புதைத்து, ஜம்மு – காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததால், காஷ்மீர்  முகங்கள் தோல்வியை வெளிப்படுத்தின .

இனி எங்களுடைய கருத்தை எப்படி கேட்பார்கள்? அனைத்தும் முடிந்துவிட்டது என்கிறார் ஸ்ரீநகரின் லால் சௌக் அருகே வசிக்கும் மின்னணு பொறியாளரான 45 வயது சாயித் கான்.

காஷ்மீரின் தலைநகர் வெறிச்சோடியுள்ள நிலையில், சாயித் கான்  பலருடைய வார்த்தைகளை பிரதிபலிக்கிறார். பட்மாலூவில் இருக்கும் ஒரு பழ வியாபாரியும், ஈத்கா அருகே வெறிச்சோடிய வீதிகளில் தன் மகனை அழைத்துச் செல்லும் ஒரு தந்தையும் ராம்பாக் முள்கம்பி தடுப்பரண் அருகே காவல் காத்த ஒரு போலீஸும் சாயித் கானின் கருத்தையே  பிரபலிக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல் தொடர்புகள், இண்டெர்நெட் ரத்து செய்யப்பட்டன. தடை உத்தரவுகள் காஷ்மீர் முழுவதும் அமலாக்கப்பட்டுள்ளது .  அதிகப்படியான ராணுவ வீரர்கள் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டிருப்பதால்   ஒரு நகரமே அக்கிரமிக்கப்பட்டுள்ளது போல் காட்சியளித்தது.

சந்தைகள் மற்றும் கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார்  நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவசர மருத்துவ சேவை தவிர, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

2016-ஆம் ஆண்டின் கொந்தளிப்புக்குப் பிறகு, பல விசயங்களில்  கடந்த ஆண்டுகளில் முன்னேற்றம் இருந்தது. பிரிவினைவாதிகள் சிறையில் இருந்தார்கள். வேலை நிறுத்தங்கள் இல்லை, கல் வீச்சுகள் இல்லை, பள்ளிகள் இயங்கின. கடைகள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அனைவரும் மகிழ்ந்தனர். இப்போது ஒரேயடியாக  தன்பக்கம்  இருந்த அனைத்து காஷ்மீரிகளையும் விரோதமாக்கிவிட்டனர். இந்த முடிவிலிருந்து நாங்கள் எப்போது மீள்வோம் எனத் தெரியவில்லை என்கிறார் கான்.

அவர்கள் அதிகார போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்களை மக்களாக பார்க்க இயலவில்லை. இதன் விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ளப்போவதில்லை, நாங்கள் எதிர்கொள்ளப்போகிறோம் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத கானின் நண்பர் ஒருவர்.

காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமர் அப்துல்லாவையும்  முஃப்தியையும் சிறையில் போட்டுள்ளனர். எங்களுடைய எம் எல் ஏ இன்ஜினியர் ரஷீத்தையும் சிறையில் தள்ள திட்டமிட்டிருந்தனர். அவர் எப்போது எங்களிடம் கல்வீசுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றூ கூறுபவர் . இப்போது எரிமலையின்  மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள் என்று தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இம்தியாஸ் அன்வானி கோபத்துடனும் வருத்ததுடனும் கூறுகிறார். 

ஜம்மு காஷ்மீர் போலீஸுக்கும்கூட கவலை இருக்கிறது. நான் ஒரு அரசு ஊழியர். நான் அரசு சொல்வதை கேட்பேன். ஆனால், என் மகனிடம் என்ன விளக்கத்தைச் சொல்வேன்? நான் எப்படி அவனிடம் இந்திய அரசு என்ன நினைக்கிறது என்பதையும் அவன் கல் வீசுபவர்களுடன் சேரக்கூடாது என்பதையும் எப்படி சொல்வது என தெரியவில்லை. இங்குள்ள இளைஞர்கள் எங்கள் மீது மரண ஆசை திணிக்கப்பட்டுள்ளது நாங்கள் ஏன் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஜம்ம்மு காஷ்மீர் போலீஸ் ஒருவர். 

இது எதிர்பாராதது. இந்தத் தடைகள் எவ்வளவு நாள் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. மீண்டும் சாதாரண நிலை திரும்பிய பிறகு என்ன நட்க்கும் என்பதும் எங்களுக்குத் தெரியாது  என்கிறார் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

கடந்த ஓரிரு நாட்களாக கல்லெறி சம்பவங்கள் எதுவும் காஷ்மீரில்  நடக்கவில்லை. மக்களின் பதட்டம் விமான போக்குவரத்தில் பிரதிபலித்தது. டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்த விமானங்கள் 30 பயணிகளோடு வந்தது  ஆனால், ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு சென்ற  விமானங்கள் நிரம்பி வழிந்தன.

காஷ்மீர் திரும்பிக்கொண்டிருந்த பயணிகள் பலரிடம் கவலை இருந்தது. என்னுடைய மூத்த மகன் அமெரிக்காவிலும் இளைய மகன் மலேசியாவிலும் இருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் மலேசியாவில் இருந்துவிட்டு நேற்றுதான் டெல்லிக்கு வந்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய மூத்த மகன் அமெரிக்காவுக்கு வரும்படி அழைக்கிறார். ஆனால் என் மகள் ஸ்ரீநகரில் இருக்கிறார். அவருடன்   கடந்த இரண்டு நாட்களாகப் பேச முடியவில்லை. நான் அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறேன். எந்த காஷ்மீரியுடனும் பேச முடியாத நிலையில், எப்படி வீட்டுக்குச் செல்வோம் எனத் தெரியவில்லை. ஸ்ரீநகருக்குச் சென்றபிறகே அங்குள்ள நிலைமை தெரியவரும் என்கிறார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர்.

நான் புல்வாமாவில் வசிக்கிறேன். என்னுடைய பெற்றோருக்கு இந்தத் தகவல் தெரியுமா எனத் தெரியவில்லை. தெரிந்தால் என்ன செய்யவார்களோ? எனக்கு கவலையாக உள்ளது. ஸ்ரீநகரில் வாகனம் கிடைக்கவில்லை என்றால், புல்வாமாவுக்கு நடந்தேதான் போக வேண்டும் என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் எம்.டெக் படிக்கும் மாணவர் ஒருவர் .

எதிர்காலம் குறித்து கவலை கொள்ளும் இவர், “படிப்பை முடித்துவிட்டு, காஷ்மீர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்ற நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது 370 பிரிவை ரத்து செய்ததால் என்னுடைய வேலை வாய்ப்பும் போய்விட்டது. காஷ்மீரில் இப்போது வேலை வாய்ப்பே இல்லை .370 பிரிவை ரத்து செய்வதன் மூலம்  அவர்கள் எங்களுடைய இதயங்களை வென்றுவிடலாம் என்று   நினைத்தார்கள். அவர்களுக்கு காஷ்மீர் வேண்டும்; காஷ்மீரிகள் வேண்டாம் என்பதைத்தான் இது காட்டுகிறது என்றார். 

ஸ்ரீநகர், ஈத்காவில்  தொழில் செய்யும் ஒருவர், வேலை விசயமாக  கடந்த 12 நாட்களாக டெல்லியிலும் கொல்கத்தாவிலும் இருந்தார். தற்போது தன்னுடைய குடும்பத்தைக் காண சென்றுக்கொண்டிருக்கிறார். அவர் பேசுகையில்  ஒரேயடியாக அவர்கள் அனைத்தையும் முடித்துவிட்டார்கள். காஷ்மீர் இந்தியாவின் கைகளிலிருந்து போய்விட்டது. பாகிஸ்தான் நுழைய வழிவகுத்து விட்டார்கள். அவர்களின் ஆதரவாளர்களாக இருந்த ஒமரையும், முஃப்தியையும் முழுவதுமாக புறக்கணித்துவிட்டார்கள். காஷ்மீரிகளுடனான பாலத்தை உடைத்துவிட்டார்கள் என்றார் .

Written by Deeptiman Tiwary |Srinagar

theIndianExpress