அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் விளம்பரங்களை நிறுத்திய மோடி அரசு; பத்திரிகை சுதந்திரத்தில் ஆஃகானிஸ்தானை விட பின்தங்கிய இந்தியா

Modi Govt Freezes Ads Placed in Times of India, The Hindu and The Telegraph

0
722

India ranked 140th out of 180 in the 2019 World Press Freedom Index, lower than countries like Afghanistan, Myanmar and the Philippines. It ranked 80th out of 139 countries surveyed when the index was started in 2002.

அரசை விமர்சித்து, அரசுக்கு எதிராக  செய்திகள் வெளியிட்டதால்  , 3 பெரிய செய்தி நிறுவனங்களுக்கு விளம்பரங்களைக் கொடுக்காமல் நிறுத்தியுள்ளது நரேந்திர மோடி அரசு . 

2014 இல் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து பத்திரிகை  சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், விமர்சித்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடப்படுகிறது என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். 

அரசிடமிருந்து வரும் விளம்பர வருவாய் நின்று போயுள்ளதாக மிகப் பெரிய பத்திரிகைகள் கூறியுள்ளன.  

பென்னட் கோல்மேன் & கோ நிறுவனத்தின் பத்திரிகைகளான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கும் , எகனாமிக் டைம்ஸ் – க்கும் வரும் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று பென்னட் கோல்மேன் & கோ நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். நாங்கள் வெளியிட்ட சில செய்திகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இருந்ததால் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அந்த பிரதிநிதி கூறியுள்ளார். 

டைம்ஸ் குழுமத்தின் 15 சதவீத விளம்பரங்கள் அரசிடமிருந்தே வருகிறது என்றும் ஒப்பந்தங்களுக்கான டெண்டர்களும், அரசின் திட்டங்கள் குறித்தும் அந்த விளம்பரங்கள் இருக்கும் என்றும் அந்த பிரதிநிதி கூறியுள்ளார்.  

ஏபிபி குழுமத்தின் (ABP Group) தி டெலிகிராஃப் – தேச பாதுகாப்பு முதல் இந்தியாவில் நிலவும் வேலையின்மை வரை – குறித்து பலவற்றை அலசி ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகிறது . இதனால் கடந்த 6 மாதங்களாக இந்தக் குழுமத்துக்கு வரவேண்டிய 15 சதவீத அரசு விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஏபிபி குழுமத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். 

நீங்கள் அரசுக்கு எதிராக எழுதினால்  உங்களைத் தண்டிக்க அரசு எடுக்கும் ஒரே நடவடிக்கை உங்களுக்கு வருவாயைத் தரும் அரசு விளம்பரங்களை நிறுத்துவதே என்று பெயர் வெளியிட விரும்பாத  ஏபிபி குழுமத்தின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். 

இது குறித்து அரசிடமிருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படாது என்றும் வருமானத்தை மீட்டெடுக்க வேறு வழிகளைத் தேட வேண்டியிருக்கிறது என்றும் பெயர் வெளியிட விரும்பாத  ஏபிபி குழுமத்தின் மற்றுமொரு பிரதிநிதி கூறியுள்ளார். 

Bureau of Outreach and Communication ஏஜென்சியின் தலைவர் சத்யேந்திர பிரகாஷ் . இந்த ஏஜென்சிதான் அரசிடமிருந்து விளம்பரங்களைப் பெற்று ஊடகங்களுக்குக் கொடுக்கும். அரசின் விளம்பரம் நிறுத்தப்பட்டது குறித்துத் தெரிந்துக் கொள்ள சத்யேந்திர பிரகாஷ் -க்கு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இமெயில் அனுப்பியும் , போன் செய்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை. 

பாஜக அரசின் செய்தித் தொடர்பாளர்கள் அனைவரும் மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நன்றாகவே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். 

பாஜக ஆட்சிக் குறித்து நிறையவே விமர்சனங்கள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவருகிறது என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நளின் கோலி .பத்திரிகை சுத்நதிரம் இருப்பதற்கு  அதுதான் சாட்சி என்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாஜக அரசு திணற செய்கிறது என்பது கேலிக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார். 

உலகளவில் பத்திரிகை சுதந்திரம் குறித்த அளவுகோலில் 180 நாடுகளில்  இந்தியா 140 வது இடத்தைப் பிடித்திருக்கிறது . ஆஃப்கானிஸ்தான், மியான்மர், பிலிப்பைன்ஸ் நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருக்கிறது . 

2002 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகை சுதந்திரம் குறித்த அளவுகோல் கணக்கிடப்பட்டது அப்போது இந்தியா 139 நாடுகளில் 80 வது இடத்தில் இருந்தது . 

தி இந்து குழுமத்துக்கும் அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் ரஃபேல் ஊழல் குறித்து பல புலனாய்வு கட்டுரைகளை தி இந்து வெளியிட்டதால்தான் என்று இந்து குழுமத்தின் பிரதிநிதி கூறியுள்ளார். 

Reuters

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here