அரசுக்கு எதிராக செய்தி ; பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி அபராதம் விதித்த மோடி அரசு

The letter from the housing ministry comes weeks after Prasar Bharti called the news agency 'anti-national' for publishing an interview which contradicted PM Modi's claims about the India-China border standoff.

0
181

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, 84 கோடி ரூபாய் அபராதம் விதித்து, மத்திய வீட்டுவசதி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் பிடிஐ செய்தி நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த இடத்தை பயன்படுத்தும் விதிகளை அந்நிறுவனம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு இத்தகைய அபராதத்தை மத்திய வீட்டுவசதி அமைச்சகம் விதித்துள்ளது.

ஜூலை 14 ஆம் தேதிக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும், மீறினால், கூடுதலாக 10 சதவீதம் வட்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்திவிட்டு விதிகளை மீறமாட்டோம் என முத்திரைத்தாளில் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் உத்த்ரவிட்டுள்ளது. பிடிஐ நிறுவனம் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக, அண்மையில் பிரசார் பாரதி தெரிவித்திருந்தது . 

இந்தியா – சீனா எல்லை விவகாரத்தில் பிடிஐ அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக கூறி அந்நிறுவனத்தை தேச துரோகி என்றது  பிரசார் பாரதி . இவ்வாறு நடந்து சில வாரங்களுக்குபின் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சீனா தூதுவரையும், சீனாவுக்கான இந்தியா தூதுவரையும்  பேட்டிக் கண்டு அதனை வெளியிட்டிருந்தது பிடிஐ செய்தி நிறுவனம். லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லை என்ற மோடியின் பேச்சுக்கு எதிர்மறையாக இருந்தது தூதுவர்களின் பேட்டி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here