அரசியல் பூகம்பத்தால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை இழந்தது போல்…எங்களோட அடுத்த டார்கெட் கோவா – பாஜகவை மிரட்டும் சிவசேனா

0
757

மகாராஷ்டிராவில் பாஜகவுடனான உறவை முறித்துவிட்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ள சிவசேனா கட்சி, கோவா மாநிலத்திலும், பாஜக ஆட்சியை கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் மகாராஷ்டிராவில் நடந்தது போல கோவா  ஆட்சியிலும்  மாற்றங்கள் வரலாம் என்று கூறியிருக்கிறார். கோவாவில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கோவா முன்னேற்றக் கட்சி (Goa Forward Party ) சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  

கோவா முன்னேற்றக் கட்சியின் தலைவரும் கோவ முன்னாள் துணை முதல்வரும் விஜி சர்தேசாய் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கிறார்.  மகாராஷ்டிராவில் நடந்ததுபோல் கோவாவில் ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாகிறது. கோவாவிலும் அதிசயம் நிகழ இருக்கிறது என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறியதாக ஏ என் ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.   

பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் . மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக கோவாவில் அவ்வாறு நடக்கவிருக்கிறது. பின்பு வேறு மாநிலங்களில் அவ்வாறு நடக்கும். பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும். 

40 இடங்கள் கொண்ட கோவா சட்ட சபையில் பாஜகவுக்கு 27 எம் எல் ஏக்களும் கோவா முன்னேற்ற கட்சிக்கு 3 எம் எல் ஏக்களும் , காங்கிரசிடம் 5 எம் எல் ஏக்களும், தேசியவாத காங்கிரஸிடம் 1 எம் எல் ஏவும், மகாராஷ்டிரவாடி கோமன்வக்  கட்சியிடம் ஒரு எம் எல் ஏவும் இருக்கிறார்கள் . 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் பாஜகவுடன் இருக்கிறார்கள்.  

2017 சட்டமன்றத் தேர்தலில் காஙிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. பின்பு பாஜக 10 காங்கிரஸ் எம் எல் ஏக்களை வாங்கியது.  

மகாராஷ்டிராவில் சிவ சேனா ஆட்சியைப் பிடித்த மறுநாள் சஞ்சய் ரவுத் இவ்வாறு பேசியிருக்கிறார். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here