தன் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று மதுரையில் நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, முதல் பொதுக்கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அடுத்த கூட்டம் திருச்சியில் நடைபெறும் எனக் கூறியுள்ள கமல்ஹாசன், கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

அதேபோன்று நடிகர் ரஜினிகாந்த்தும் தனது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, வெள்ளிக்கிழமை (இன்று) சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்ததார். அப்போது அவர், தன் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம் என்றும், அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும், அவர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு சில காலம் ஆகும் என்றும் தெரிவித்தார். கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது என்றும், மக்கள் நீதி மய்யம் நன்றாகச் செயல்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்