சிபிஐ அமைப்பை, மத்திய அரசு தொடர்ந்து தவறாக பயன்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

அலோக் வர்மா விவகாரம் தொடர்பாக, செய்தியாளர்களிடம் மம்தா கூறுகையில், சிபிஐ அமைப்பை, மத்திய அரசு தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக சிபிஐ-யை பாஜக தலைவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். பாஜகவின் சட்டத்துக்கு புறம்பான செய்லகளைப் பார்த்து நான் சலித்து போனேன், பல வருடங்களாக நான் அரசியலில் இருக்கிறேன் இந்த மாதிரியான மோசமான செயல்களைப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

ஆர்பிஐ விவகாரத்திலும் இதே அணுகுமுறையையே பாஜக கடைப்பிடித்தது என்றார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலைப்பற்றி பேசிய மம்தா பானர்ஜி –

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மூலம் பிரிவினையை தூண்ட பாஜக முயல்கிறது. அஸ்ஸாம், திரிபுரா மாநில மக்களிடம் நாங்கள் தொடர்ந்து கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். மக்களின் பக்கமே என்றும் நாங்கள் இருப்போம்.

குஜராத்திலிருந்து பிகார் மாநிலத்தவரை விரட்டிய அவர்கள், இப்போது அஸ்ஸாமிலிருந்து மேற்கு வங்க மக்களை விரட்ட முயலுகின்றனர் என்றார் மம்தா.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்