சென்னையில் மழை வெள்ளத்தின் போது போட்டோ ஷூட்  நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மோட்டார்கள் மூலம் சாலைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் அண்ணாமலை நேற்று ஆய்வு செய்தார். தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில் படகில் சென்று இவர் பார்வையிட்டார்.

…..

 எப்படி வீடியோ எடுக்க வேண்டும், எப்படி ஃபிரேம் வைக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் பாஜகவினர் ஆலோசனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மழை நேரத்தில் இப்படி வீடியோ சூட் எடுப்பது விளம்பரம் தேட என்று இணையத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலை இருக்கும் இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ்  எம்பி ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை? அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது. பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here