அரசியல்வாதிகளால் பதிவிடப்படும் அனைத்து இடுகைகளையும் “செய்திக்குரிய உள்ளடக்கம்” என்று கருதுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.

போலிச் செய்திகளின் பரவலை தடுப்பதற்காக தாங்கள் முன்னெடுத்துள்ள செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறியும் திட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, அரசியல் சார்ந்த விவாதங்களில் நடுவராகவும் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது விருப்பத்திற்கேற்றவர்களை தங்களது பதிவுகளின் மூலம் சென்றவடைவதை தடுக்கும் வகையிலும் தாங்கள் இருக்க விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் மேலும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரசியவாதிகள் என்னும் பட்டியலுக்குள் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை ஃபேஸ்புக் வெளியிடவில்லை.

Courtesy:BBC