1. மற்ற சமூகத்தினரைவிட யாதவர்களும், ராஜ்புத் சமூகத்தினரும்தான் அதிகளவில் மது குடிப்பதாக உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியிலுள்ள சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவர், மற்ற சமூகத்தினரைவிட யாதவர்களும், ராஜ்புத் சமூகத்தினரும்தான் அதிகளவில் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாகவும், இது அவர்களது மூதாதையர்களின் தொழிலாகவும் உள்ள எனவும் கூறியுள்ளார்.

rajpar

அவரின் இந்தச் சர்ச்சைக்குரியப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சரின் வீட்டின் மீது ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பினர் சிலர், தக்காளி மற்றும் முட்டைகளை வீசினர்.

2. விவசாயிகள் மட்டும்தான் தற்கொலை செய்து கொள்கிறார்களா என கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் மத்தியப் பிரதேச மாநில வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா படிதார். விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இது குறித்து பாலகிருஷ்ணா படிதாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

pati

அப்போது பதிலளித்த அவர், “யார்தான் தற்கொலை செய்து கொள்ளவில்லை?. வியாபாரி, தொழிலதிபர்கள், ஏன் காவல் ஆணையர்களும்கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அதற்குரிய காரணம் தெரியும்” என்றார். அவரது பேச்சுக்கு விவசாய சங்கத்தினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

3. திரிபுராவில் முதல்வர் பிப்லாப் தேப் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவில் ராமாயண காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள் போன்றவை இருந்ததாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

biblab

இதுபோன்று அடுத்தடுத்து பேசி சர்ச்சையில் சிக்கி வருவதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அரசு வேலைக்காக இளைஞர்கள், காத்திருக்காமல், பீடா கடை, பசு மாடு வளர்த்தல் போன்ற சிறுதொழில்களைச் செய்ய வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்: #SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்