அரசியலில் கமலுக்கு ஆதரவில்லை – ‘பளீச்’ சுந்தர் சி

0
198
Sundar C

அரசியலில் இறங்கியுள்ள கமல், ரஜினியில் என்னுடைய ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்குதான் என்று கூறினார் சுந்தர் சி.

சங்கமித்ரா படம் ட்ராப்பானதால் கலகலப்பு 2 படத்தை இயக்கினார் சுந்தர் சி. வழக்கமான அவரது பாஸ்ட் பாசஞ்சர் வேகத்தில் படம் முடிந்துவிட்டது. படம் முடிந்ததைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, “நீங்கள் ரஜினி, கமல் இருவரையும் வைத்து படம் இயக்கியிருக்கிறீர்கள். அவர்கள் இருவரும் இப்போது அரசியலில் குதித்திருக்கிறார்கள். இந்த இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

சற்றும் யோசிக்காமல், என்னுடைய ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கே என்றார் சுந்தர் சி. அதாவது கமலுக்கு அவரது ஆதரவு இல்லையாம்.

இதையும் படியுங்கள்:நீதிபதி லோயா மர்ம மரணம்’: மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்