அரசியலமைப்பை அழிக்கும் சதித்திட்டங்களை காங்கிரஸ் அனுமதிக்காது என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்திய அரசியலமைப்பை சீர்குலைக்கும், அழிக்கும் நடவடிக்கைகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது .
இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்
भारत का संविधान हमारे संघर्ष और अस्तित्व दोनों की पहचान है|
यह हमारा दर्शन है| हमारा अभिमान है|
हमारे रग-रग में इसका रंग है|
इसको मिटाने की षड्यंत्र करने वाले जान लें: ना तो ऐसा करने की उनमें हैसियत है, ना कांग्रेस पार्टी और मैं कभी भी उन्हें ये करने देंगे|#ConstitutionDay pic.twitter.com/dRn8QPjuN1
— Rahul Gandhi (@RahulGandhi) November 26, 2018
இந்திய அரசியலமைப்பை அழிக்கும் சதித்திட்டங்களை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. மேலும் அதற்கான பலம் அவர்களுக்கு (பாஜக) கிடையாது. ஏனெனில் இந்திய அரசியலமைப்பில் இருக்கும் ஒவ்வொரு அமைப்பும் நம்மிடையே வேரூன்றி உள்ளது.
மேலும் அரசியலமைப்பை உருவாக்க நடைபெற்ற போராட்டங்களும், அதன் நிலைத்தன்மையும் தான் இந்திய அரசியலமைப்பின் தனித்தன்மையாகும். அதுவே நமது தத்துவமாகும். எனவே இதை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் என்றும் நிறைவேறாது. ஏனென்றால் அதற்கான பலம் அவர்களுக்கு கிடையாது. மேலும் காங்கிரஸ் கட்சியும் அதை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.