திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற 7 முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு பல்துறை வல்லுநர்கள் கருத்துக்களைக் கேட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று கிராமப்புறங்களில் பரவலாக மாறிய நிலையில் பல்வேறு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசின் தவறுகளால் மாநிலம் முழுக்கவும் #Covid19; முதல்வரின் குழப்பங்களால் எங்கெங்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்சியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 7 முக்கிய ஆலோசனைகள் :

  • மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பொருளாதார இழப்பை சமாளிக்க அனைவரின் கையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை தேவை.
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்தபட்சம் தலா ரூ.5000 வழங்க வேண்டும்.
  • பொதுமுடக்க காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் வேறு இடத்திற்கு செல்வதை முறைப்படுத்த வேண்டும்.
  • மக்கள் செல்வதற்கும், நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
  • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்த வேண்டும்.
  • மூலதனச் செலவினங்களை சுகாதாரத் துறையிலும், தேவையான பிற சேவைகளிலும் அதிகரிக்க வேண்டும்

போன்ற கருத்துக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here