(December 4, 2015)

தொடர்கனமழையினால் கடந்த பத்து வருடங்களில் முதல்முறையாக சென்னை விமானநிலையம் மூடப்பட்டதை அடுத்து அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திலிருந்து தற்காலிக உள்நாட்டு விமானசேவை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் ஆறு விமானங்கள் வரை இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்திலிருந்து அரக்கோணம் விமான நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அரக்கோணம் – சென்னை கடற்கரை வரை மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்