அயோத்தி வழக்கு ; மசூதிக்கு போகிறவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? விஷத்தை பரப்பிய சில தொலைக்காட்சிகள்

0
338

 ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் ஆளும் அரசை கேள்வி கேட்பதாக இருக்க வேண்டும் . ஆனால் நாட்டில் பெரும்பான்மைவாதம் ஆட்சி செய்யும் போது நிர்வாகங்கள் அரசுக்கு ஆதரவாக செய்ல்படுவது போல ஊடகங்களும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. 

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பை உருவாக்குவதாகவே ஒவ்வொரு இரவும் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் இருக்கின்றன.  அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்த வழக்கு தொடர்பாக, இந்து தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் கடந்த 40 நாள்களாக வாதங்களை முன்வைத்தனர். இந்நிலையில் இறுதிவாதங்கள் புதன்கிழமையுடன் நிறைவடைந்து, தேதி குறிப்பிடபடாமல்  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு இந்து கரசேவகர்கள் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதியை இடித்தார்கள் . ராமர் பிறந்த இடத்தில் தான் பாபர் மசூதியைக் கட்டியிருந்தார்கள் என்றும் கூறப்பட்டது.  

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சன்னி வக்ஃபு வாரியம் இடிக்கப்பட்ட மசூதியை புதுபித்து விடலாம் என்றும் நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா அமைப்பினர் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறி வந்தார்கள்.   

இறுதிவாதங்கள் நிறைவடைந்து, தேதி குறிப்பிடபடாமல்  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்  இந்தியா டுடே குழுமத்தின் ஆஜ் தக் தொலைக்காட்சி புதன்கிழமை இரவு ஒரு விவாதம் நடத்தியது . விவாதத்திற்கான தலைப்பு இதுதான் –நம்முடைய ராமர் பிறந்த இடமும் ராமரும் நம்முடையவர்கள் என்றால் இந்த மசூதிக்கு போகிறவர்கள் (முஸ்லிம்கள்) எங்கிருந்து வந்தார்கள்  

ஆஜ்தக் தொலைக்காட்சியின் இந்தத் தலைப்பு ஒரு சமூகத்தினருக்கானது என்று புரிகிறது . இந்தத் தலைப்புக்காக சங்கப்பரிவாரங்கள் சந்தோசபட்டனர். ஒருசாரார் தங்களது எதிர்ப்பையும் பதிவிட்டனர் .   

மூத்த பத்திரிகையாளர் பிரதீக் சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில் நிச்சயம், இந்தியாவை அழிப்பதில் இந்திய ஊடகங்கள் வகித்த பங்கைப் பற்றி ஒரு நாள் யாராவது பேசுவார்கள். இதை ஒப்புக்கொள்ள மக்களும் இருப்பார்கள் என நம்புகிறேன். மேலும், இதை ஒருபோதும் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என அப்போது சபதம் எடுப்பார்கள் என்று பதிவிட்டார். 

 

இது குறித்து யோகேந்திர யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் என்னால் நம்பமுடியவில்லை தாராளவாத கண்ணோட்டமும் மதச்சார்பற்ற நம்பிக்கையும் கொண்ட ஒரு கண்ணியமான மனிதர் அருண் பூரியால் நடத்தப்பட்டு வரும் தொலைக்காட்சியில் இப்படி ஒரு விவாதமா? இது தீமையின் சக்தி அல்ல, ஆனால் நன்மையின் பலவீனம் மனிதகுலத்தை அழிக்கிறது என்று எதிர்ப்பை பதிவிட்டிருந்தார். 

நாட்டை பிரிக்கும் ஊடகங்கள் ஆஜ்தக் போலத்தான் இருக்கும்  என்று சஞ்சய் ஹெக்டே பதிவிட்டிருந்தார் 

செய்தி ஊடகங்களில் பார்த்த மிகக் கேவலமான ஒன்றை நீங்கள் பகிருங்கள். ஒரு நாள் நம்மை நாம் இப்படி கேட்டுக்கொள்வோம்… ‘எப்படி நம்மை ஒருவர் இப்படி பிரிக்க முடியும்’ என்று. அதற்கு முன், ஊடக வெறுப்பின் விதைகளை நாம் பாதுகாப்பது முக்கியம். அப்போதுதான் எதிர்கால சந்ததி அதிலிருந்து கற்க முடியும் என்று பதிவிட்டிருந்தார் ஆகாஷ் பானர்ஜி. 

ஆஜ்தக் தொலைக்காட்சி மட்டும் வெறுப்பு என்ற  விஷத்தை பரப்பவில்லை. ஏபிசி நியுஸ் தொலைக்காட்சியின் விவாதத்தில் ‘அயோத்தியா பற்றிய சிறப்பு விவாதம் என்று தலைப்பிட்டு ஜெய்ஶ்ரீராம் என்று எழுதிய பேக்டிராப்பில் விவாதத்தை நடத்தினர். ஜெய்ஶ்ரீராம் என்ற கோஷத்தை  கடவுளை வணங்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்; ராமஜன்மபூமி உட்பட பல இந்து அமைப்புகள் நடத்தும் பேரணியிலும் ஜெய்ஶ்ரீராம் கோஷத்தைக் கேட்கலாம்; கும்பல் வன்முறையின் போதும் ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை கேட்கலாம் .

Zee News தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட விவாதத்தின் தலைப்பும் அவ்வாறே இருந்தது. அயோத்தி வழக்கும் நாட்டின் பெரும்பானமையான மக்களின் நம்பிக்கையும் என்று Zee News  தலைப்பிட்டிருந்தார்கள். 

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி #ExposeDelayBrigade  #AcceptAyodhyaVerdict என்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டிருந்தது . Lutyens (வெளிநாட்டவர்கள்) அயோத்தி கார்டை இழக்கிறார்களா? என்று விவாதத்தின் போது கேள்வி எழுப்பியிருந்தது. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியால் தீர்ப்பு வரும் வரை  காத்திருக்க முடியவில்லை போலும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்றே பேசினார் அதன் செய்தியாளார் நவிகா குமார். அவர்களுக்கு எப்போது என்றுதான் தெரியவில்லை. அதனால் விவாதத்தின்போது #RamMandirCountdown என்றார்கள்.   மேலும்  ‘தாமதமாகும் நீதி, ஏளனம் செய்யப்படும் இந்து’ என்றும் ‘மசூதி வழக்கறிஞர் எல்லையை மீறுகிறார்’ என்றும் செய்தி வெளியிட்டது 

http://scroll.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here