அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லக்னௌவில் பேசிய யோகி ஆதித்யநாத் பாஜகவின் பலம் அதிகரித்து வருவதை கண்டு எதிர்க்கட்சிகள் கவலையடைந்துள்ளன. இதனால் நாட்டின் வளர்ச்சியை அக்கட்சிகள் எதிர்க்கின்றன. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அக்கட்சிகள் கை கோர்த்துள்ளன. நாட்டில் ஸ்திரமின்மையை (குழப்பத்தை) ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. அப்படி குழப்பம் நிலவினால், அதில் ஆதாயம் அடைய அக்கட்சிகள் விரும்புகின்றன.

கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதை கூட எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்க முடியவில்லை. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திறன் கொண்ட தலைவர் ஒருவரை எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தவும் முடியவில்லை.

அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும். இதில் மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் ராமர்தான் கோயில் கட்டப்பட வேண்டிய தேதியை முடிவு செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வளர்ச்சியை முன்வைத்து பாஜக தேர்தலை எதிர்கொள்ளும். தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக சாதியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம், பாஜகவுக்கு கிடையாது. மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

( இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here