அயோத்தியில் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதா? ஆதாரங்களைத் தாருங்கள்: உச்ச நீதிமன்றம்

0
122

 கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதற்கு என்பதற்கு ஆதாரங்களைத் தாருங்கள் என்று  அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினசரி  விசாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதற்கு என்பதற்கு ஆதாரங்களைத் தாருங்கள் என்று  அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம் லல்லா சார்பில் ஆஜரான வைத்யநாதன்   தனது வாதங்களை தொடர்ந்தார்.

அவரிடம் நீதிபதி கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதற்கு என்பதற்கு ஆதாரங்களைத் தாருங்கள்  என்று கூறினார்.

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் ஆய்வு செய்துள்ளார். அப்போதைய ஆணையரின் அறிக்கையில் அப்போது மசூதியாக இருந்த கட்டத்தின் தூண்களில் இந்து தெய்வங்களின் உருவங்கள் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார். சிவன் உள்ளிட்ட இந் து உருவங்கள் வழக்கமாக மசூதிகளில் இருக்க வாய்ப்பில்லை. இந்து கோயில்களில் மட்டுமே இருக்கும்..

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அத்துடன் அயோத்தி கோயில் தூண்களில் இருந்த உருவங்களின் படங்களையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அத்துடன் 1950-ம் ஆண்டு அளிக்கப்பட்ட அறிக்கையையும், அப்போது மசூதிக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் வைத்தியநாதன் சமர்பித்தார்.

Courtesy: DN